வேலூர் | பகலில் துணி வியாபாரம், இரவில் திருட்டு - கோயில்களில் திருடிய வியாபாரி கைது

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் இரவில் கோயில்களின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் காணிக்கை பணத்தை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து, நான்கரை கிலோ வெள்ளி, ஒன்றரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உட்பட பல்வேறு கோயில்களின் பூட்டை உடைத்து நகைகள், காணிக்கைகள் திருடப்பட்டது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த உமேஷ் (44) என்பவரை கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை காவலர்கள் திருப்பதியில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். விசா ரணையில், அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள சில கோயில்களில் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இந்த தகவல் வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையில், கிருஷ்ண கிரி கிளை சிறையில் அடைக் கப்பட்டிருந்த உமேஷை வேலூர் மாவட்ட காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோயில், சாத்துமதுரை முருகன் கோயில், பள்ளிகொண்டா நாகேஸ்வர் கோயில் உள்ளிட்டவற்றின் பூட்டை உடைத்து சுமார் 4.5 கிலோ வெள்ளி, மூன்றரை பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் காணிக்கை பணத்தை திருடியது தெரியவந்தது. இதில், ரொக்கப் பணம் ரூ.20 ஆயிரம், 2 பவுன் தங்க நகைகளை அவர் செலவிட்ட நிலையில், உருக்கி கட்டியாக வைத்திருந்த 4.5 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகை களை மட்டும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருப்பதியைச் சேர்ந்த உமேஷ், கன்னியாகுமரியில் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர் பால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண் டார். கன்னியாகுமரியில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த உமேஷூக்கு கரோனா ஊரடங் கால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஊரடங்குக்கு பிறகு இரு சக்கர வாகனத்தில் ஊர், ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அப்போது, தனியாக இருக்கும் கோயில்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். வேலூர் அடுத்த அ.கட்டுபுடி கிராமத்தில் சமீபத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவியுடன் வசித்து வந்துள்ளார். பகலில் வியாபாரம் தொடர்பாக வெளியில் செல்லும்போது, கோயில்களை கண்காணித்து இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். திருடிய நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். அவை தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்