கிருஷ்ணகிரி | யுனிவர் காயின் மோசடியில் மேலும் ஒருவர் மீது புகார்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுனிவர் காயின் டிஜிட்டல் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுனிவர் காயின் என்கிற பெயரில், டிஜிட்டல் நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி நடந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், செப்டம்பர் 18-ம் தேதி அந்நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை நடத்தி, ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டனர். இதுதொடர்பாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலத்தில் புகார் மனு அளித்தனர். அதில், டிஜிட்டல் காயின் வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள 4 பேரை கைது செய்ய வேண்டும்.

மேலும், இந்த மோசடி ஞானசேகர் என்பவரின் தலைமையில் நடந்துள்ளது. எனவே, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

8 mins ago

விளையாட்டு

24 mins ago

வாழ்வியல்

33 mins ago

ஓடிடி களம்

43 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்