சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பிஆர்ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.75 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்குகாட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீவிஜய் (44). பட்டதாரி. இவருக்கு ராசிபுரத்தைச் சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் கடந்த ஆண்டு அறிமுகமானார்.

அப்போது ராஜ்மகேந்திரன், தனதுதாய் கலைவாணி, நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிரணி இணைச் செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பிஎஸ்என்எல் அலுவலகத்தில்

வேலை செய்வதாகவும், பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத் துள்ளதாகவும் கூறியுள்ளார். ரூ.10 லட்சம் கொடுத்தால் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பிஆர்ஓ வேலை வாங்கித் தருவதாக ஸ்ரீவிஜயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீவிஜய் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை 3 தவணையாக ரூ.7.75 லட்சத்தை ராஜ்மகேந்திரன் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். ஆனால், பிஆர் ஓவேலை வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீவிஜய், சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ்விடம் ராஜ்மகேந்திரன், அவரது பெற்றோர், அவரது தம்பி மீது புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில், குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, அதிமுக பெண் நிர்வாகி கலைவாணி, அவரது கணவர் சுப்பிரமணி, மகன்கள் ராஜ்மகேந்திரன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது கூட்டுசதி, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்