திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கிய முருகன் கும்பலுக்கு வங்கி திருட்டிலும் தொடர்பு: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

திருச்சி

திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு வழக்கான பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதும் முருகனின் தலைமை யிலான குழுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக முருகனின் கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சமயபுரம் நெ.1 டோல் கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பி.என்.பி) பிச்சாண் டார்கோயில் கிளை உள்ளது. கடந்த ஜன.26, 27-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலை யில், மர்ம நபர்கள் வங்கியின் சுவரைத் துளையிட்டு, லாக்கர்களை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்ற போது சிதறிக்கிடந்த 40 பவுன் நகைகள், ரூ.1.74 லட்சம் ரொக் கம் மீட்கப்பட்டது. மேலும் வங்கியில் இருந்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போனதாக கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக கடந்த 9 மாதங் களில் ஆயிரத்துக்கும் அதிகமானோ ரிடம் தனிப்படை போலீஸார் நடத் திய விசாரணையின் அடிப்படை யில் தஞ்சாவூர் மாவட்டம் புதுக் குடி அருகேயுள்ள காமாட்சிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் ராதாகிருஷ்ணன்(28) என்ப வரை நேற்று கைது செய்தனர். இவர், பிரபல கொள்ளையன் முருகனு டன் சேர்ந்து, வங்கிக் கொள்ளை யில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரையில் கட்டர் வாங்கினர்

இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமயபுரம் நெ.1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர் துவாக்குடி பகுதி யில் வாங்கியதை அறிந்து அப்பகுதி யைச் சேர்ந்த 300 பேர் கொண்ட பட்டி யலை தயாரித்து ஒவ்வொருவரி டமாக விசாரித்தபோது, ராதாகிருஷ் ணன் இக்கொள்ளைக்குப் பிறகு, குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேறிவிட்டது தெரியவந்தது.

முருகன் கும்பலுக்கு தொடர்பு

இந்தச் சூழலில், வங்கி லாக் கரை உடைக்க மதுரையில் கட்டர் வாங்கியதை அறிந்து அங்கு சென்று தொடர்புடைய கடையில் விசாரித்தபோது ராதாகிருஷ்ணன், கணேசன்(35) என்பவருடன் அடிக் கடி அந்த கடைக்கு வந்து கட்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. இந் நிலையில் இன்ஸ்பெக்டர் மதன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப் படை போலீஸார் நேற்று அதிகாலை வத்தலகுண்டு அருகே கண்ணா பட்டியில் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில் முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோ ருடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். நகைகள், பணத்தை மீட்பதற்காக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகி றது.

மேலும், கடந்த ஜனவரி மாதம் உப்பிலியபுரத்தில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி கிளை, சமயபுரம் பேருந்து நிலையம் அருகே கூட்டு றவு வங்கி, மண்ணச்சநல்லூரில் தனியார் நிதி நிறுவனம் ஆகியவற் றில் கொள்ளையடிக்க முயற்சித்த தும் முருகன் தலைமையிலான கும்பல்தான் என உறுதி செய்யப் பட்டுள்ளது என்றார்.

ஒரு மாதத்துக்கு முன் நோட்டம்

முருகன் தலைமையிலான கும் பல் கொள்ளையடிக்கும் விதம் குறித்து போலீஸார் கூறியபோது, "வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகளே முருகனின் தேர் வாக இருந்துள்ளது. கொள்ளையில் ஈடுபடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அப்பகுதிக்குச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வங்கிகள் மற்றும் நகைக்கடைக்கு பலமுறை நேரில் சென்று நன்கு நோட்டமிட்டு விடுமுறை நாட்களில் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்" என்றனர்.

கொள்ளைக்கு சுற்றுலா வேன்

கொள்ளையில் ஈடுபடுவதற்காக மேட்டுப்பாளையம் வட்டார போக்கு வரத்து அலுவலக (டி.என் 40) பதிவு எண் கொண்ட ஒரு சுற்றுலா வேனை வாங்கி முருகனின் கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது.

கொள்ளையடிக்க திட்டமிட்ட கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைத்து, சுற்றுலா பயணிகள் போல நடமாடி கண்காணித்து வந்துள்ளனர். அந்த வாகனம் இருக் கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் பறிமுதல் செய்து விடுவோம் என தனிப்படை போலீ ஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்