சைபர் க்ரைம் புகார் விசாரணையில் தேக்கம்: காரணம் போலீஸா? நெட்வொர்க் நிறுவனங்களா?- பணமிழக்கும் அப்பாவிகள் பரிதவிப்பு

By என்.சன்னாசி

சைபர் க்ரைம் புகார்கள் மீதான விசாரணையில் நிலவும் தேக்கத்துக்கு காரணம் போலீஸாரா அல்லது நெட்வொர்க் நிறுவனங்களா என்று தெரியாத நிலையில் அப்பாவி மக்கள் தொடர்ந்து தங்கள் பணத்தை இழக்கும் சூழல் நிலபுகிறது.

முறையான அனுமதியின்றி இணையவழியில் நுழைவது, போலி இணைய வழி முகவரிகளை  பதிவிடுதல், புகைப்படம், தகவல்களை மிகைப்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாக்குவது மற்றும் ஏடிஎம், வங்கிக் கடன் அட்டைகளை துஷ்பிரயோகம் செய்து பணத்தை திருடுதல் போன்ற இணைய வழி தவறுகளை சைபர் குற்றங்கள் என, போலீஸார் கூறுகின்றனர். 

கணினி, ஆன்ட்ராய்டு மொபைல் வளர்ச்சியால் சைபர் குற்றங்களும் அதிகரிக்கின்றன. இவ்வகை புகார்களுக்குத் துரித நடவடிக்கை எடுக்க, காவல்துறை அலுவலகங்களிலும் சைபர் க்ரைம் ஆய்வகம் செயல்படுகிறது. 

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சைபர் குற்றம் குறித்த புகார்களுக்கு இப்பிரிவு போலீஸார் சேகரித்து அளிக்கும் தகவல் அடிப்படையில் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

சைபர் க்ரைம் குறித்த புகார்கள் தொடர்பாக தேவையான தகவல்களை அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர், விசாரணை அதிகாரிகள்  பரிந்துரையில் சம்பந்தப்பட்ட செல்போன் நெட்வொர்க்கிடம்  சைபர் க்ரைம் போலீஸாரால் பெறப்படுகிறது.

அதிகரிக்கும் சைபர் க்ரைம் புகார்களுக்கு ஏற்ப போலீஸார் பணிபுரிந்தாலும், நெட்வொர்க் நிறுவன அதிகாரிகளிடமிருந்து தாமதமாகவே தகவல்களைப் பெற முடிகிறது என சைபர் க்ரைம் போலீஸார் தரப்பில் கூறுகின்றனர். 

துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய ஏடிஎம், க்ரெடிட் கார்டு மோசடி குறித்த புகார்களில் இத்தகைய சுணக்கத்தால் பாதிக்கப்பட்டோர் பணத்தை இழக்கின்றனர்.

பொன்னான 5 மணி நேரம்..

இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது: இணைவழி குற்றங்களை குறித்த புகார்களுக்கு தனியார் நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு  அவசியம். 

புகார்களுக்கு சம்பந்தப்பட்ட  நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தகவல் அனுப்பி, டவர் லொக்கேசன் பார்க்கவேண்டும். பேசியவர், கேட்டவர் என, இரு டவர்களின் தகவல்களையும் பெறவேண்டும். அப்போதுதான் குற்றம் புரிந்தவர்கள், பாதிக்கப்பட்டோர்  எங்கே இருந்தனர் என்பதை உறுதி செய்ய முடியும்.  

நெட்வொர்க் நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை துவங்க முடியும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வெட்வொர்க் நிறுவனத்திடம் இருந்து உரிய தவகல் வருவதில்லை.

போலி வங்கிக் கடன் அட்டை, ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவோருக்கு அந்தப் பணம் குறைந்தது 5 மணிநேரத்துக்கு பிறகே செல்லும். அதற்குள் துரிதமாக செயல்பட்டால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பணத்தை மீ்ட்டுத் தர முடியும். இதற்கு நெட்வொர்க் நிறுவனம் துரிதமாக செயல்படவேண்டும், என்றனர்.

எங்களுக்கும் அவகாசம் வேண்டும்..

தாமத குற்றச்சாட்டை போலீஸ் தரப்பில் முன்வைக்க நெட்வொர்க் நிறுவனங்களோ போலீஸார் வேண்டும் தகவலைத் திரட்ட எங்களுக்கும் குறித்த அவகாசம் வேண்டும் என்று நடைமுறைச் சிக்கலைப் பட்டியலிடுகின்றனர்.

நெட்வொர்க் நிறுவனத்தினர் கூறுகையில், "சைபர் க்ரைம் போலீஸாரின் பரிந்துரை நேரத்தை பொறுத்து நாங்கள் துரிதமாகவே தகவல்களை அனுப்புகிறோம். தொழில்நுட்ப அடிப்படையில் அவர்கள் தகவல்களைக் கேட்ட நேரத்திலிருந்து அதனை கொடுப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எங்களுக்கும் தேவை" எனக் கூறுகின்றனர். 

இரு தரப்பினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டும் நிலையில், பொதுமக்கள் பணம் இழப்பதுமட்டும் வாடிக்கையாக இருக்கிறது.

தகவல் பரிமாற்ற இடைவெளியை சைபர் க்ரைம் போலீஸாரும் நெட்வொர்க் நிறுவன பொறுப்பாளர்களும் கலந்தாலோசித்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இத்தகைய குற்றங்களால் பணமிழந்தோரின் கோரிக்கையாக இருக்கிறது. இருதரப்பும் கவனிக்குமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 mins ago

வலைஞர் பக்கம்

47 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்