கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது கரோனா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 2,568 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,205 ஆக உயர்ந்தது. அதேநேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் 5 லட்சத்து 23,920 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 19,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 4 கோடியே 25 லட்சத்து 44,689 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 189.48 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் கரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டதைவிட அதிக அளவில் இருப்பதாக சர்வதேச மருத்துவ இதழான ‘லேன்செட்’டில் செய்தி வெளியானது. பிறப்பு, இறப்பு தகவல்கள் அடிப்படையில் 2020-ம் ஆண்டுக்கான அறிக்கையை மத்திய அரசு செவ்வாய்கிழமை வெளியிட்டது. இதில் 2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டில் 4.75 லட்சம் இறப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினரும் கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுத் தலைவருமான வி.கே.பால் நேற்று டெல்லியில் கூறுகையில், “2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டு மரணங்கள் அதிகரித்துள்ளது என்றாலும் பல்வேறு காரணங்கள் நோய்களால் மரணம் அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு பதிவான மரணங்கள் எல்லாமே முற்றிலும் கரோனா மரணங்கள் இல்லை. தகவல்கள் துல்லியமாகக் கிடைக்கின்றன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்