‘மாமன்னன்’ பட 2-வது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ சனிக்கிழமை வெளியீடு

By செய்திப்பிரிவு

மாரிசெல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வெளியாக உள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் நீக்கமற நிறைந்துள்ளது. பாடலை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை பாடியுள்ளவர்கள் குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

47 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்