துப்பறிவாளன் அப்டேட்: அக்‌ஷராவுக்கு பதிலாக ஆண்ட்ரியா

By ஸ்கிரீனன்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் 'துப்பறிவாளன்' படத்தில் அக்‌ஷரா ஹாசனுக்கு பதிலாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், வினய், பிரசன்னா, இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'துப்பறிவாளன்'. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

அரோல் கொரேலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னையில் இப்படப்பிடிப்பு தொடங்கி 2 கட்டங்களை முடித்துள்ளனர். இதில் சுமார் 65% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தேதிகள் குளறுபடியால் இப்படத்திலிருந்து விலகவே அப்பாத்திரத்துக்கு தற்போது ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி, மொத்தமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜனவரி 14-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்