டி.ஆரின் கடும் சாடலால் அழுத தன்ஷிகா: விழித்திரு பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை

By செய்திப்பிரிவு

டி.ராஜேந்தரின் கடும் சாடலால் தன்ஷிகா அழத் தொடங்கியதால், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

மீரா கதிரவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விழித்திரு'. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர் "'கபாலி' படத்தில் ரஜினியோடு நடித்தவுடன் தன்ஷிகா, டி.ராஜேந்தரை மறந்துவிட்டார். அவருடைய பேச்சில் என்னைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டார்" என்று கூறினார்.

தொடர்ச்சியாக தன்ஷிகாவை கடுமையாக சாடவே, தன்ஷிகா "மன்னிக்க வேண்டும். வேண்டுமென்றே குறிப்பிடாமல் இல்லை. மறந்துவிட்டேன். உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. " என்று கூறினார்.

ஆனாலும் டி.ராஜேந்தர் "மேடை நாகரிகம் என்று ஒன்றுள்ளது. உன்னுடைய மதிப்பை எடுத்துக் கொண்டுப் போய் எந்த மார்க்கெட்டில் விற்பது. மேடை நாகரிகம் என்று ஒன்றுள்ளது. நான் ஹன்சிகாவையே பார்த்தவன்" எனத் தொடர்ச்சியாக அவரை கடிந்துக் கொண்டார். இதனால் தன்ஷிகா அழத் தொடங்கினார்.

மேடையிலேயே தன்ஷிகாவை டி.ராஜேந்தர் கடுமையாக சாடியதால், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

மேலும்