இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வசந்தபாலனின் வெப் தொடர்!

By செய்திப்பிரிவு

அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள 'அநீதி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இதில், துஷாரா விஜயன், அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். தனது நண்பர்களுடன் இணைந்து, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் வசந்தபாலனே தயாரித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து அவர், ஜீ 5 ஓடிடி தளத்துக்காக வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் பரத் நடிக்கிறார். வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் பரத் நடித்திருந்தார். 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். இதில், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், கிஷோர், கவிதா பாரதி உட்பட பலர் நடிக்கின்றனர். சென்னையில் நடக்கும் கதையை கொண்ட இந்த வெப் தொடரின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

29 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுலா

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்