விவேகம் வெளியீடு தள்ளிவைப்பு: ஆகஸ்ட் 11 வெளியீட்டுக்கு குவியும் படங்கள்

By ஸ்கிரீனன்

ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியீட்டுக்கு 'விவேகம்' தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியீட்டுக்கு படங்கள் குவிந்து வருகன்றன.

தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 'விவேகம்' படக்குழு. பல்வேறு படங்கள் தணிக்கைச் செய்யப்பட்டு, 'விவேகம்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக காத்திருந்தார்கள்.

நேற்று (ஜூலை 31) 'விவேகம்' படக்குழு வெளியீட்டு தேதியை அறிவித்தவுடனே, ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியீடு என பல படங்கள் அறிவித்திருக்கிறார்கள். ஏனென்றால், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால் சுமார் 6 நாட்கள் கூட்டம் இருக்கும் என்பது தான் காரணம்.

ஆகஸ்ட் 10-ம் தேதி 'மகளிர் மட்டும்' படமும், ஆகஸ்ட் 11-ம் தேதி 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'மாயவன்', 'குரங்கு பொம்மை', 'தப்பு தண்டா' ஆகிய படங்கள்  வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 'நான் ஆணையிட்டால்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களும் இந்த தேதியில் இணையும் எனத் தெரிகிறது.

பல்வேறு படங்கள் குவிவதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

43 mins ago

க்ரைம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்