2.0 அப்டேட்: அரிய வெளிநாட்டுப் பறவைகளுடன் படப்பிடிப்பு

By ஸ்கிரீனன்

'2.0' படத்தில் பறவைகள் அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறார் ஷங்கர்.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது மீண்டும் '2.0' படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளதால், அவர் சம்பந்தப்பட காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

இப்படத்தில் பறவைகளை வைத்து அனிமேட்ரானிக்ஸ் முறையில் சில முக்கிய காட்சிகளைக் காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதில் மிகவும் தேர்ச்சிப் பெற்ற ஹாலிவுட் நிறுவனமான 'Legacy Effects' இப்படத்தில் பணிபுரிந்து வருகிறது.

இப்படத்தில் அக்‌ஷய்குமாரின் தோற்றம் வெளியான போது, அவரும் பறவையைப் போன்ற முகத்தோற்றத்துடனே காணப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும், '2.0' படத்துக்காக காகங்களின் குரல்களை பதிவு செய்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஒரு பேட்டியில் ரசூல் பூக்குட்டி தெரிவித்திருந்தார்.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்று வரும் '2.0' படப்பிடிப்பில் இயக்குநர் ஷங்கர், அரிதான மிகப்பெரிய வெளிநாட்டு பறவைகளை வைத்து சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார். மேலும், ரியாஸ்கான் பறவை போன்று வேடமிட்டு ரஜினியுடன் மோதும் சண்டைக்காட்சி ஒன்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது லைக்கா நிறுவனம். கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால், அவை முடிவு பெறுவது பொறுத்து படத்தின் வெளியீட்டு தேதி இறுதி செய்யப்பட இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

49 mins ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்