பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

'மண்டேலா' பட இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கும் புதிய படம் 'மாவீரன்'. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். 'டான்' படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் ரிலீஸுக்காக தயாராக இருக்கிறது.

'மாவீரன்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

படத்தில் நாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும், யோகிபாபு நடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார். படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

சினிமா

33 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

தமிழகம்

47 mins ago

ஆன்மிகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

மேலும்