தனுஷின் கொடி பர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்கிரீனன்

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொடி' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கொடி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இரண்டு பாத்திரங்கள் குறித்து படக்குழு, "இரட்டையராக அரசியல்வாதி மற்றும் பேராசிரியர் என 2 வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். அன்பு மற்றும் கொடி ஆகியவை தான் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர்கள். மேலும், 'கொடி' தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

'தொடரி' வெளியான உடன் 'கொடி' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 'கொடி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது. வீடியோ வடிவில் வெளியாகி இருக்கும் 'கொடி' போஸ்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்