“இரு மகன்களும் ஷோவை கைப்பற்றிவிட்டார்கள்” -  'தி கிரே மேன்' ப்ரீமியரில் தனுஷ்

By செய்திப்பிரிவு

நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் 'தி கிரே மேன்' படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்துகொண்டது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. ருஸ்ஸோ பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களது இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘தி கிரே மேன்'.

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், இம்மாதம் 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில், தனுஷுடன் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இதில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நடிகர் தனுஷ் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''யாத்ராவும், லிங்காவும் முழுமையாக ஷோவை கைப்பற்றிவிட்டார்கள்'' என்று பதிவிட்டுள்ளார். தனுஷ் மகன்கள் இருவரின் முதல் சர்வதேச சிவப்பு கம்பள தோற்றம் இதுதான் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

உலகம்

24 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்