காட்சிகளைக் குறைத்தது ‘வலிமை’ வசூலில் எதிரொலிக்குமா?

By செய்திப்பிரிவு

‘வலிமை’ படத்தின் காட்சிகள் குறைப்பு வசூலில் எதிரொலிக்குமா என்பது கோலிவுட் வட்டாரத்தின் பலரது கேள்வியாக இருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பல்வேறு படங்களின் கலவை, படத்தின் நீளம் என பல்வேறு தவறுகளை சமூகவலைதளத்தில் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

‘வலிமை’ படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பினால், முதல் நாளில் 28 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. இதனால் படத்தின் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். படத்துக்கு இருந்த எதிர்மறை விமர்சனங்களால் வசூல் பாதிக்கும் என்று கருதினார்கள். அவ்வாறே இரண்டாவது நாளில் 11 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்துள்ளது ‘வலிமை’.

இதனால் படத்தின் சுமார் 12 நிமிடக் காட்சிகளைக் குறைத்துவிட்டது படக்குழு. தற்போது அனைத்து திரையரங்குகளிலுமே படத்தின் புதிய வெர்ஷன்தான் திரையிடப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறது படக்குழு.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) வரை வசூல் பெரியளவில் மாற்றம் இருக்காது. பிப்ரவரி 28-ம் தேதி திங்கட்கிழமை வசூல்தான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கிறது.

தற்போதைய சூழலில், ஒட்டுமொத்தமாகப் படத்தின் பங்கீட்டுத் தொகை அளவில் தமிழகத்தில் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்யும் என்கிறார்கள். இது ‘வலிமை’ படத்தின் வியாபார அளவில் ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட குறைவான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்