‘பீஸ்ட்’ 100வது நாள் படப்பிடிப்பு - வைரலாகும் புகைப்படம்

By செய்திப்பிரிவு

‘பீஸ்ட்’ 100வது நாள் படப்பிடிப்பை முன்னிட்டு இயக்குநர் நெல்சன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்றோடு (நவ.28) ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. 100வது நாளை முன்னிட்டு பீஸ்ட் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படக்குழு மற்றும் இசைக்கருவிகள் சூழ விஜய் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்