மார்ச்சில் வெளியாகும் ‘விக்ரம்’?

By செய்திப்பிரிவு

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் ‘விக்ரம்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பைப் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும், பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 'பிக் பாஸ் சீசன் 5' நிறைவடைந்ததும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு படங்கள் தவிர்த்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்