நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவிலான பட்டியலில் இடம்பிடித்த ‘டாக்டர்’ - சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ‘டாக்டர்’ படம் உலக அளவிலான டாப் 10 பட்டியலில் இடம்பெற்றதற்கு சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

'டாக்டர்' படம் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை புரிந்தது. தமிழகத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் 'ரெமோ'தான் அதிக வசூல் செய்துள்ளது. அந்தப் படத்தின் வசூலை 'டாக்டர்' முறியடித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘டாக்டர்’ படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் பத்துப் படங்கள் அல்லது வெப்சீரிஸ் பட்டியலை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘டாக்டர்’ திரைப்படம் முதல் இரண்டு வாரங்களாக உலக அளவில் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. மேலும் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தையும் டாக்டர் பிடித்துள்ளது.

இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்தியன், “இது மிகப்பெரிய வெற்றி. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இந்த பிரம்மாண்ட வெற்றியைச் சாத்தியமாக்கிய நெல்சன், அனிருத், மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் நன்றி. ‘டாக்டர்’ எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்