'விருமன்' அப்டேட்: டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டம்

By செய்திப்பிரிவு

'விருமன்' படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'விருமன்'. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டது படக்குழு.

தற்போதுள்ள சூழல் படி இந்த ஆண்டு இறுதிக்குள், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

கார்த்தி இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் ஷங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர். இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.செல்வகுமார், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்