ஓடிடியில் வெளியாகிறது 'அன்பறிவு'?

By செய்திப்பிரிவு

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பறிவு' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த படம் 'சிவகுமாரின் சபதம்'. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் மற்றொரு படத்தின் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கியது சத்யஜோதி நிறுவனம்.

அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு 'அன்பறிவு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தப் படத்தை நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கொடுத்துவிட்டது சத்யஜோதி நிறுவனம். ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. எப்போது வெளியீடு என்பது விரைவில் தெரியவரும். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் தமிழா ஆதியே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

45 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்