நயன்தாரா தயாரிப்பில் கவின்

By செய்திப்பிரிவு

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் கவின் நாயகனாக நடிக்கவுள்ளார்.

படங்கள் இயக்குவது மட்டுமன்றி, நயன்தாராவுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' இவருடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்ததுதான். அதனைத் தொடர்ந்து 'கூழாங்கல்', 'ராக்கி' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்து படங்களைத் தயாரிக்கவும் கதைகள் கேட்டு வந்தார்.

தற்போது கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தயாரிக்கவுள்ளது. இதனைப் புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம், லலித்குமாருடன் இணைந்து தயாரித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்