இந்தியிலும் ரீமேக் ஆகும் '96’

By செய்திப்பிரிவு

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற '96' திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்துக்காக கோவிந்த் வசந்தா உருவாக்கிய பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இப்போதும் இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

'96' திரைப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், தமிழில் வெற்றி பெற்ற அளவுக்கு தெலுங்கு, கன்னட மொழிகளில் வெற்றியடையவில்லை. இதன் இந்தி ரீமேக் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது '96' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அஜய் கபூர் கைப்பற்றியுள்ளார். இதன் ரீமேக்கில் யார் நடிக்கவுள்ளார்கள், யார் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்