சிம்புவின் அடுத்த படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சிலம்பரசன் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சிலம்பரசன். இதில் முதல் படமாக கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' உருவாகி வருகிறது. இதன் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவுற்றுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ள மற்றொரு படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோகுல் இயக்கத்தில் உருவாகும் 'கொரோனா குமார்' படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சிலம்பரசன். செப்டம்பர் 25-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு.

இது சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் 48-வது படமாகும். முதலில் பல்வேறு நாயகர்களின் பெயர்கள் அடிபட்டாலும், தற்போது சிலம்பரசன் நடிப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்புடன் நாளை (செப்டம்பர் 19) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிரத்யேக பாடல் ஒன்றும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 'கொரோனா குமார்' படக்குழு உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்