'ருத்ர தாண்டவம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ருத்ர தாண்டவம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெயரைப் பெற்றது. இதனால், மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது.

'திரெளபதி' படத்தைத் தொடர்ந்து 'ருத்ர தாண்டவம்' என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார் மோகன்.ஜி. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'ருத்ர தாண்டவம்'.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ருத்ர தாண்டவம்' படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் ரிஷி ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஜி.எம்.பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி பிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்