கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்

By ஸ்கிரீனன்

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் படப்பிடிப்பை மார்ச் முதல் வாரம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஆனந்த், கருணாஸ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மே முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இப்படத்தின் நாயகிகளாக அவீகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி. 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருக்கிறார்.

பயணத்தில் வரும் சந்திப்பு என்றுமே சுகமான நினைவுகள் தான். அப்படி ஒரு பயணத்தில் இரண்டு பெண்களை நாயகன் சந்திக்கிறான். நாயகனை ஒருத்தி காதலிக்க , நாயகனோ மற்றொருவளை காதலிக்கிறான். இதனால் வரும் பிரச்சினைகளை நாயகன் எப்படி சமாளிக்கிறான் என்பது தான் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் திரைக்கதை சுவாரசியம் என்கிறது படக்குழு.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சென்னை, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட பல படங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

12 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்