விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

விஷால் நடித்துள்ள படத்துக்கு 'வீரமே வாகை சூடும்' எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்கள்.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வந்தார் விஷால். இதன் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கியது படக்குழு. அதிலும் ஒரே கட்டமாகப் படமாக்கி முடித்தது.

இது விஷால் நடிப்பில் உருவாகும் 31-வது படமாகும். இந்தப் படத்துக்கு பெயரிடப்படாமல், முழுக்க படப்பிடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தது படக்குழு. இன்று (ஆகஸ்ட் 29) விஷாலின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனை முன்னிட்டு, து.பா.சரவணன் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 'வீரமே வாகை சூடும்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் நாயகியாக டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்