அஜீத் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் இணையத்தில் வரவேற்பை பெற்றன.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இந்தப் படத்தை ஹெச்.வினோத்தே இயக்குவார் எனத் தெரிகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அஜீத் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஹெச்.வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். அப்படத்தின் பாடல்கள் மட்டும் பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சூழலில் தற்போது மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
'வலிமை' படம் வெளியானவுடன்தான் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
விளையாட்டு
3 hours ago