மீண்டும் தொடங்கப்பட்ட ஹரி - அருண் விஜய் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 3-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஹரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படப்பிடிப்பு தடைப்பட்டது. பின்பு கரோனா 2-வது அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் குறைந்து இதர படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டாலும், ஹரி - அருண் விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. தற்போது அனைத்து நடிகர்களின் தேதிகளும் கிடைத்திருப்பதால் இன்று (ஜூலை 28) முதல் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்திவேல், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்