அருண் விஜய்க்கு பதிலாக ஆதி ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

லிங்குசாமி இயக்கி வரும் படத்தின் வில்லனாக ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இதில் நதியா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் ராம் பொத்தினேனியுடன் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால், தற்போது ஆதி வில்லனாக நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. புதுமையான கதாபாத்திரமாக இருந்ததால் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக ஆதி தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு மும்முரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி மும்முரமாகப் படப்பிடிப்பு நடத்தி வருகிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்