கோஸ்டி படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

காஜஸ் அகர்வால் நடிப்பில் 'கோஸ்டி' படப்பிடிப்பு நிறைவடைந்தது.

திருமணத்துக்குப் பிறகு பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால், படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' ஆகிய படங்களைப் போலவே, 'கோஸ்டி' எனும் படத்தை இயக்கி வருகிறார் கல்யாண். இதில் காஜல் அகர்வால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, மயில்சாமி, ஊர்வசி, சத்யன், மனோபாலா உள்ளிட்ட பலர் காஜல் அகர்வாலுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சில காட்சிகளுடன், படத்துக்கான ப்ரமோ பாடலும் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் படப்பிடிப்பு நேற்றுடன் (ஜூலை 8) முடிந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு.

'கோஸ்டி' பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, பிரபுதேவா நடிக்கவுள்ள படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார் கல்யாண். இதனை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்