கோவிட் நினைத்துப் பார்க்காத வழிகளில் சவால் விடுகிறது: ராஷ்மிகா மந்தனா

By செய்திப்பிரிவு

கோவிட் நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் நமக்குச் சவால் விடுகிறது என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், சில மாநிலங்களில் இன்னும் தீவிரம் குறையவில்லை. பொதுமக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திரையுலக பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். கரோனா விழிப்புணர்வு தொடர்பாக ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"நம்ப முடியாத, எதுவும் கணிக்க முடியாத இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கோவிட் நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் நமக்குச் சவால் விடுகிறது. இது போன்ற ஒரு விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை.

நம் அன்றாட வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், அதோடு கவலையும், நிச்சயமற்ற தன்மையும் சேர்ந்து, உங்களில் பலருக்கும், எனக்கும் கூட கையாளமுடியாத படி இருக்கிறது.

இது மீண்டும் நடக்கிறது என்ற உண்மையை ஜீரணிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. ஆனால் இது போன்ற நேரங்களில் நேர்மறையான மன ஓட்டத்துடன் இருப்பதே இந்த போரை வெல்வதற்கான பாதையில் நம்மைச் செலுத்தும் என்பதை நான் உணர்ந்தேன்.

இந்த நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு, அசாதாரண விஷயங்களைச் செய்யும் நம் சாதாரண ஹீரோக்களின் சில கதைகளை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்,

இவை எனக்கு நம்பிக்கையைத் தந்தது, என்னை புன்னகைக்க வைத்தது. மேலும் இதுபோன்ற ஒன்றை எதிர்த்துப் போராடும் போது நம்மிடையே மொழி, நாம் எங்கிருந்து வருகிறோம் என எந்தத் தடையும் இல்லை என்பதை இந்தக் காலகட்டம் உணர்த்தியுள்ளது.

இது எனக்கு மிகவும் பெருமையைத் தருகிறது. உங்களைப் புன்னகைக்க வைக்க, உங்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கையைத் தர நான் இதைச் செய்கிறேன். இந்த நாயகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி. நாம் இதை வெல்வோம்”

இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

29 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்