'மாயவன் ரீலோடட்' நாயகனாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'மாயவன் ரீலோடட்' படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமான படம் 'மாயவன்'. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு உருவான இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால், இந்தப் படத்தின் இந்தி டப்பிங்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து 'மாயவன்' படத்தின் 2-ம் பாகமாக 'மாயவன் ரீலோடட்' படத்தை அறிவித்தார் சி.வி.குமார்.

இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால், இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை அறிவிக்காமல் இருந்தார். இன்று (மே 7) சந்தீப் கிஷனின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது 'மாயவன் ரீலோடட்' படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படம் உருவாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

இந்தியா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்