முதல் பார்வை: தங்கமகன் - இன்னும் மின்னியிருக்கலாம்

By உதிரன்

'வேலையில்லா பட்டதாரி' படத்துக்குப் பிறகு தனுஷ், வேல்ராஜ், அனிருத் கூட்டணியில் உருவான படம், ஏமி ஜாக்சன், சமந்தா, சதீஷ் நடிப்பில் உருவான படம் என்ற இந்த காரணங்களே 'தங்கமகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

'விஐபி'யின் ஹிட்டில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்திக் கொண்ட தனுஷ், 'தங்கமகன்' படத்தின் மூலம் என்ன மாதிரியான பிம்பத்தை உருவாக்குவார்? என்று யோசித்தபடியே தியேட்டருக்குள் நுழைந்தோம்.

'தங்கமகன்' கதை: அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்தெறிய முயற்சிக்கிறார் தனுஷ். அதில் சில தடைகளும், தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. அதை எப்படிக் கடக்கிறார்? களங்கத்தைத் துடைக்கிறாரா? காதல் என்ன ஆனது? என்பது மீதிக் கதை.

'விஐபி' படத்தில் தனுஷின் மாஸ் அப்பீல் மூலம் கமர்ஷியல் ஸ்கெட்ச் போட்டு சிக்ஸர் அடித்த இயக்குநர் வேல்ராஜ் இப்போது ஃபேமிலி டிராமா ஜானரில் ரூட் அடித்திருக்கிறார். குடும்பக் கதையம்சப் படத்தில் தனுஷை நடிக்க வைத்ததற்காகவே வேல்ராஜைப் பாராட்டலாம்.

திரையில் தனுஷைப் பார்த்ததும் ரசிகர்கள் விசிலை தெறிக்க விடுகிறார்கள். அப்பாவிடம் எதிர்த்துப் பேசாமல் சதீஷிடம் அப்பா பேச்சுக்கு கவுன்டர் கொடுப்பது, அம்மாவுக்காக கோயில் செல்வது, சதீஷைக் கலாய்ப்பது, ஏமியிடம் காதலில் உருகுவது, குடும்பத்தை விட்டுக்கொடுக்காதது, சமந்தாவுடன் குடும்ப வாழ்க்கையில் படர்வது, எதிரிக்கு ஆப்பு வைப்பது என எதிலும் குறைவைக்கவில்லை.

காலேஜ் பையன், குடும்பத் தலைவன் என இரண்டு வித தோற்றங்களிலும் தனுஷ் உறுத்தாமல் பொருந்துகிறார். துறு துறு என இருக்கும் தனுஷ் பன்ச் வசனம் பேசும்போதும், ஆக்‌ஷனில் இறங்கி அடிக்கும்போதும் அதகளமாகிறது தியேட்டர்.

ஏமிஜாக்சன் கேரக்டருக்கேற்ப நன்றாக நடித்திருக்கிறார். தன்னை அடித்த கணவனை திருப்பி அடிக்கும் ஏமியின் ரியாக்‌ஷனுக்கு தியேட்டரில் எகிறியது மாஸ் அப்ளாஸ்.

சமந்தா சிணுங்கல், சிரிப்பு, சோகம், சின்ன சின்ன சந்தோஷங்களில் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகையாக நிரூபிக்கிறார்.

சதீஷின் டைமிங் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. தோசை கல் வசனத்தில் ஃபினிஷிங் டச் சூப்பர்.

சாம்பிளுக்கு ட்ரெய்லரில் வந்த சதீஷ் - தனுஷ் உரையாடல்

''எங்கே போற?''

''ஃபேன்ஸி ஸ்டோர்.''

''எதுக்கு?''

''இங்க் பாட்டில் வாங்க.''

''நானும் வர்றேன்''

''தேவையில்லை''

''நைட் ஃபுல்லா யோசிச்சு பார்த்தேன். அந்த ரேவதி எனக்கு ஓ.கே. அந்த வெள்ளைக்காரியை நீயே வெச்சுக்கோ... இப்போ சொல்லு. எங்கே போற?''

''மச்சான் கோயிலுக்கு போறேன் நீ வர்ல...''

*

''மச்சான் நான் லவ் பண்ற பொண்ணுடா. அட்ஜஸ்ட் பண்ணி சிரிடா ப்ளீஸ்... என்றதும் சதீஷ் தனுஷுடன் சேர்ந்து சிரிப்பது என இருவரின் காமெடி கூட்டணி ரகளை.

'இனிது இனிது' ஆதித் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார், ராதிகா, ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

குமரனின்(அறிமுகம்) ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்துக்குப் பெரும்பலம். அனிருத் இசையில் என்ன சொல்ல, ஜோடி நிலவே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

தமிழை யாராலும் அழிக்க முடியாது.

தமிழ்நாட்ல தமிழ் தோக்கவே முடியாதுடா போன்ற வசனங்களுக்கும், பின்னணியில் ஒலிக்கும் இசைக்கும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதையும் சொல்லியே ஆக வேண்டும்.

காதல், பாசம் என முதல் பாதி கடப்பது ஓ.கே. ஆனால், இரண்டாம் பாதி பக்கா சீரியல் தனமாக இருக்கிறது. ரஜினி ஃபார்முலாவில் படம் எடுக்க முடிவெடுத்துவிட்டு, ஆக்‌ஷனில், திரைக்கதையில் டெம்பொவைக் குறைப்பதும், தடுமாறுவதும் பலவீனமாக இருக்கிறது.

ஆனாலும், குடும்பத்துக் கதையம்சத்தில் தனுஷை ரசிக்க 'தங்கமகன்' பார்க்கலாம்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்