நடிகர் மாதவனுக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

நடிகர் ஆர்.மாதவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆர்.மாதவன் தனது ட்விட்டர் பதிவில், "ரான்ச்சோவை ஃபர்ஹான் தொடர்ந்து சென்றுதான் ஆக வேண்டும். வைரஸ் என்றுமே எங்களைத் துரத்தியிருக்கிறார். இம்முறை அவர் எங்களைப் பிடித்து விட்டார். ஆனால் எல்லாம் நலமாக இருக்கிறது. விரைவில் கோவிட் கிணற்றில் கிடக்கும். இந்த இடத்தில் மட்டும்தான் ராஜு இருக்கவேண்டாம் என்று நினைக்கிறோம். உங்கள் அத்தனை அன்புக்கும் நன்றி. நான் நன்றாக தேறி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை ‘3 இடியட்ஸ்' படத்தின் கதாபாத்திரங்களை முன்வைத்து மாதவன் வெளியிட்டுள்ளார். 3 இடியட்ஸ் திரைப்படத்தில் ஆமிர் கான் கதாபாத்திரத்தின் பெயர் ரான்ச்சோ. அவரது உயிர் நண்பராக நடித்த மாதவன் கதாபாத்திரத்தின் பெயர் ஃபர்ஹான். ஆமிர் கானுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், ‘3 இடியட்ஸ்’ படத்தின் கதாபாத்திரங்களின் பெயரை வைத்தே அவ்விஷயத்தை மாதவன் பகிர்ந்திருக்கிறார்.

இதில் வைரஸ் என்பது போமன் இரானி கதா பாத்திரத்தைக் குறிக்கிறது. தமிழில் சத்யராஜ் நடித்திருந்தார்.

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஆமிர்கானுக்கு நேற்று முன்தினம் (மார்ச் 24) கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்