அருண் விஜய் படத்தில் இணைந்த புகழ்

By செய்திப்பிரிவு

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் புகழ்.

ஹரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அருண் விஜய். இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதைப் படக்குழுவினர் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்கள்.

நாயகியாக ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, 'கே.ஜி.எஃப்' வில்லன் ராமசந்திர ராஜூ, ஜெயபாலன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து 'குக் வித் கோமாளி' புகழ் ஒப்பந்தமாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்தது.

முதன்முறையாகப் பெரிய படமொன்றில் ஒப்பந்தமாகி, அவருக்கென்று தனியாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் 'குக் வித் கோமாளி' ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். தனது போஸ்டரை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அனைவருக்கும் புகழ் நன்றி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்