'சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

பாண்டிராஜ் - சூர்யா இணையும் படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சூர்யா 40' என அழைத்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (ஜனவரி 24) இமானின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

தற்போது 'சூர்யா 40' படத்தின் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. சூர்யாவுக்கு நாயகியாக 'டாக்டர்' படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்