2021 வெளியீட்டில் 4 தனுஷ் படங்கள்: ரசிகர்கள் குஷி

By செய்திப்பிரிவு

'அசுரன்' படம் வெளியாகும் முன்பே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜகமே தந்திரம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சில முக்கியக் காட்சிகளையும் படமாக்கியுள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை

தற்போது அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளதால் வரும் பிப்ரவரி மாதம் 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது படக்குழு.

'ஜகமே தந்திரம்' படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்’ படமும் இந்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று தொடங்கியது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து இந்த ஆண்டின் இறுதியில் இப்படடத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இவை தவிர ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் தனுஷ் நடித்து வரும் ‘அத்ரங்கி ரே’ படமும் இந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு மட்டும் 4 நான்கு தனுஷ் படங்கள் வெளியாகிறது என்ற தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

27 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

47 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்