'மாஸ்டர்' ட்விட்டர் எமோஜி வெளியீடு

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தை விளம்பரப்படுத்த ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள். அந்த விளம்பரங்களில் சமீபமாக ட்விட்டர் எமோஜியும் இணைந்துள்ளது. சமீபத்திய விஜய் படங்களுக்குத் தொடர்ச்சியாக ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது 'மாஸ்டர்' படத்துக்கும் ட்விட்டர் எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #VijayTheMaster உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்தால் 'மாஸ்டர்' புகைப்படத்துடன் ட்வீட் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு விரைவில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும், பிரம்மாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்