நவ.22 தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு கடும் போட்டி

By செய்திப்பிரிவு

நவம்பர் 22-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ஆர் அணி மற்றும் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பல்வேறு வழக்குகள், சர்ச்சைகளுக்குப் பிறகு நாளை (நவம்பர் 22) தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கியுள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார்கள். இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை. இதனால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார். மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடவுள்ளனர். தற்போது போட்டியாளர்கள் அனைவருமே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு முந்தைய தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை அடுத்த நாள் (நவம்பர் 23) காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

சினிமா

5 mins ago

உலகம்

19 mins ago

விளையாட்டு

26 mins ago

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

55 mins ago

தமிழகம்

45 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்