மிஷ்கின் பிறந்த நாளுக்கு ஒன்றிணைந்த முன்னணி இயக்குநர்கள்

By செய்திப்பிரிவு

மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்கள் ஒன்றிணைந்து, இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.

இன்று (செப்டம்பர் 20) இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருடைய திரையுலக நண்பர்கள், நடிகர்கள் என பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் மிஷ்கின்.

ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கும் 'பிசாசு 2' படத்தை இயக்கவுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவுள்ளது.

இதனிடையே, இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாளை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், சசி மற்றும் பாலாஜி சக்திவேல் அனைவரும் மிஷ்கினை வரவழைத்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரவிவருகிறது.

கடந்தாண்டு ஷங்கர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை மிஷ்கின் தனது அலுவலகத்தில் முன்னணி இயக்குநர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டாடியது நினைவுக் கூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்