'பிகில்' கிராபிக்ஸ் காட்சிகள் உருவான விதம் வெளியீடு

By செய்திப்பிரிவு

'பிகில்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உருவான விதத்தை வெளியிட்டுள்ளது கிராபிக்ஸ் செய்த நிறுவனம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் ஃபுட்பால் விளையாட்டை மையப்படுத்தி இருந்ததால், பல காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டன. மேலும், இரண்டு விஜய் வரும் காட்சிகளும் முழுக்க கிராபிக்ஸ் தான். இதற்கே பல கோடிகளைச் செலவழித்தது தயாரிப்பு நிறுவனம். தற்போது படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெறவுள்ளது.

இதனிடையே, படத்தில் எதெல்லாம் கிராபிக்ஸ் என்பதையும், அவை எப்படி உருவாக்கப்பட்டன என்பதையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபுட்பால் போட்டிகள் அனைத்தையும் சென்னையிலேயே அரங்குகள் அமைத்துக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. அந்தக் காட்சிகளை அப்படியே கிராபிக்ஸ் மூலம் முழுமையாக மாற்றியிருப்பது தெளிவாகி இருக்கிறது. இந்த வீடியோ பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'பிகில்' கிராபிக்ஸ் காட்சிகள் உருவான விதம்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்