'ராட்சசன்' இந்தி ரீமேக்கின் இயக்குநர் முடிவு

By செய்திப்பிரிவு

'ராட்சசன்' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குவதாக முடிவாகியுள்ளது.

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.

இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இதர மொழிகளில் ரீமேக் உரிமையைப் பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றினார்கள். இதில் தெலுங்கு ரீமேக் 'ராக்‌ஷஸுடு' என்ற பெயரில் வெளியாகி, அதுவும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை ரமேஷ் வர்மா இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்திருந்தார். தற்போது, 'ராட்சசன்' இந்தி ரீமேக் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இதனிடையே, இந்தப் படத்தின் ரீமேக்கை இயக்குவதற்கு 'ராட்சசன்' இயக்குநர் ராம்குமாரைக் கேட்டது படக்குழு. அவரோ தனுஷ் படத்தை இயக்கவுள்ளதால் மறுத்துவிட்டார். இறுதியில், தெலுங்கு ரீமேக்கான 'ராக்‌ஷஸுடு' படத்தை இயக்கிய ரமேஷ் வர்மா இந்தி ரீமேக்கையும் இயக்கவுள்ளார்.

இதற்கான ஒப்பந்தக் கையெழுத்தும் முடிந்துவிட்டது. விரைவில் நடிகர்கள் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்