'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து வதந்தி: மனோஜ் விளக்கம்

By செய்திப்பிரிவு

'சிகப்பு ரோஜாக்கள் 2' படம் குறித்து வெளியாகியுள்ள வதந்திக்கு, பாரதிராஜாவின் மகன் மனோஜ் விளக்கம் அளித்துள்ளார்.

கமல், ஸ்ரீதேவி நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இந்தப் படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா தயாரிப்பில் மனோஜ் இயக்கத்தில் 'சிகப்பு ரோஜாக்கள் 2' அறிவிக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படம் அறிவிப்புடனே நின்றுவிட்டது.

பின்பு சில மாதங்களுக்கு முன்பு 'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்த அறிவிப்பு வெளியானபோது, "அந்தப் படத்தின் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகவும், நேரம் வரும்போது இயக்குவேன்" என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கூறியிருந்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக 'சிகப்பு ரோஜாக்கள் 2' படம் உருவாக உள்ளதாகவும் மனோஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த வதந்தி தொடர்பாக மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"சமீபமாக 'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அவை எதுவுமே உண்மையில்லை. அனைத்தும் முடிவானவுடன் நானும், என் தந்தை பாரதிராஜாவும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். அனைவருக்கும் நன்றி".

இவ்வாறு மனோஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்