அஜித்துக்குப் புகழாரம் சூட்டியுள்ள கார்த்திகேயா

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அஜித்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் கார்த்திகேயா.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இதுவரை 40% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஹைதராபாத் மற்றும் சென்னையில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிவுக்கு வந்த பிறகே, இதர படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

'வலிமை' படத்தில் அஜித்துடன் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருவது உறுதியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் யாரையும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வருகிறார்.

நேற்று (ஆகஸ்ட் 3) தமிழில் ‘அமராவதி’ படத்தில் அஜித் நாயகனாக நடிக்க ஒப்பந்தமான நாளாகும். 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தான் இதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் அஜித். இதனை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். #28YrsOfSELFMADETHALAAjith என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

இதற்காக பிரத்யேக போஸ்டர்களை எல்லாம் உருவாக்கி அஜித் ரசிகர்கள் வெளியிட்டு இருந்தனர். பிரபலங்கள் பலரும் அஜித் மீதான தங்களுடைய பார்வையை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியிருந்தனர். இதில், 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா அஜித் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சினிமா பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்து ஏராளமான இன்னல்களையும், தோல்விகளையும் சந்தித்து, அவற்றிலிருந்து ஒவ்வொரு முறையும் அதிக வலிமையுடன் வெளியே வந்து தமிழ் சினிமாவின் தலயாக மாறியுள்ளார். உங்கள் பயணத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் உந்துசக்தியாக எடுத்துக் கொள்ளமுடியும் சார். 28 வருடத்தைக் கடந்தமைக்கு வாழ்த்துகள்''.

இவ்வாறு கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்