விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் மோகன் தாஸ்

By செய்திப்பிரிவு

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்துக்கு 'மோகன் தாஸ்' எனப் பெயரிட்டுள்ளனர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தைத் தொடர்ந்து, பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவுடன் நடித்துள்ள 'காடன்' வெளியாகவுள்ளது. கரோனா அச்சத்தால் இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், எழில் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜகஜால கில்லாடி' படமும் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்து, அப்படத்தைத் தயாரித்தும் வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரோனா அச்சம் முடிந்தவுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால். 'மோகன் தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிக்கிறார். படத்தையும் அவரே தயாரிக்கிறார். இதனை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இந்தப் படத்தை கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் அறிவிக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தி விஷ்ணு விஷால் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள அறிமுக டீஸர் மூலம், முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள படம் என்பது தெளிவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

36 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்