கரோனா வைரஸ் பாதிப்பு: ஜே.எஸ்.கே முன்வைக்கும் 4 முக்கிய கோரிக்கைகள்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பை முன்வைத்து, திரையுலகினருக்குத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே 4 முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு படத்தின் பணியும் நடைபெறவில்லை. இதனால் பட வெளியீடு, படப்பிடிப்பு என அனைத்துமே கரோனா அச்சம் நீங்கித் தொடங்கும்போது தமிழ்த் திரையுலகம் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கரோனா வைரஸ் பாதிப்பால், தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வர்த்தக நிபுணர்களும் கணித்துள்ளனர்.

இதனிடையே, முன்னணித் தயாரிப்பாளரான ஜே.சதீஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாகத் தமிழ்த் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டன. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், பட வேலைகள் முடிந்து வெளியிடும் நிலையில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்துவிட்டன.

இந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்காக ஒரு தாழ்மையான வேண்டுகோள்:

* தற்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், திரைக்கு வர இருக்கும் திரைப்படங்களின் கதாநாயகர், கதாநாயகி, இயக்குநர், இசையமைப்பாளர், கேமராமேன், மற்றும் முக்கியமான டெக்னீஷியன்கள், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து குறைந்தபட்சம் 30% சம்பளத்தை விட்டுக்கொடுத்து இந்தக் கடுமையான சூழலில் தயாரிப்பாளர்களுக்குத் தோள்கொடுத்து பக்கபலமாக இருந்து உதவ வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள், மற்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இந்த காலக்கட்டத்தில் யாரும் 3 மாதங்கள் வட்டியோ, இஎம்ஐயோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் திரைத்துறை பைனான்சியர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

தயாரிப்பாளர்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த காலச்சூழ்நிலை முற்றிலும் மாறி இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அதாவது 2 மாதங்களோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ அதுவரை வட்டித் தொகையினை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மிகத் தாழ்மையுடன் வேண்டுகோளை வைக்கிறேன். அப்படி செய்யும்பட்சத்தில் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சுமை, பயம் அகலும். இயல்பு நிலை திரும்பியதும் நல்லமுறையில் படத்தினை முடித்து வெளியிட மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

* இயல்பு நிலை திரும்பியதும், இந்த ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய முன்னுரிமை கொடுத்து, உதவ வேண்டும் என்று தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.

* சிறிய படங்கள் நிறையத் திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, இயல்புநிலை திரும்பியதும் சிறிய பட்ஜெட் படங்கள், அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று மாறி மாறி வெளியாகும் வகையில் காலச்சூழலை உருவாக்கிச் சிறு தயாரிப்பாளர்களை வாழ வைப்பதற்கு தியேட்டர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் துணைநிற்க வேண்டும்.

இந்த வேண்டுகோள்கள் அனைத்தும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் எண்ணம். அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர்களின் மனநிலையை உணர்ந்து இங்கே பதிவு செய்கிறேன்.

இந்த வேண்டுகோள்களுக்கு தயவுகூர்ந்து சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் செவிசாய்த்து தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்குமாறும், இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து, உறுதுணையாக இருந்து, இந்த சூழலை முற்றிலும் முறியடிக்கப் பக்கபலமாக இருந்து, உதவுமாறும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பில் மிக மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்