கரோனா வைரஸ் எதிரொலி: 'அண்ணாத்த' படப்பிடிப்பில் மாற்றம்!

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், வட இந்தியாவில் படமாக்கத் திட்டமிடப்பட்ட 'அண்ணாத்த' காட்சிகள் யாவும் ஹைதராபாத்தில் படமாக்கப்படவுள்ளன.

'தர்பார்' படத்தை முடித்துவிட்டு, சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு வட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் படமாக்கலாம் என முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து செய்திகள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன. இதனால், அங்கு படமாக்கத் திட்டமிடப்பட்ட காட்சிகள் அனைத்தையும் ஹைதராபாத்திலேயே காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

'அண்ணாத்த' படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

39 mins ago

சுற்றுலா

51 mins ago

கல்வி

8 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்