'டாக்டர்' மூலம் அறிமுகமாகும் அர்ச்சனாவின் மகள்

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார் வி.ஜே.அர்ச்சனாவின் மகள் ஜாரா.

'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் 'டாக்டர்' படத்தை சிவகார்த்திகேயனே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, இளவரசு, டோனி, வினய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தப் படத்தில் வி.ஜே.அர்ச்சனாவின் மகள் ஜாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவது உறுதியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வருபவர் அர்ச்சனா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம். சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தனது மகள், சிவகார்த்திகேயனுடன் நடித்து வருவது தொடர்பாக அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "திரையுலகில் அறிமுகத்துக்கு ஒரு அன்பான இயக்குநர் கிடைப்பது பெரும் வரம். அந்த வகையில் ஜாரா சந்தோஷமாக இருப்பதற்கு நன்றி இயக்குநர் நெல்சன் திலீப்குமார்" என்று தெரிவித்துள்ளார்.

’டாக்டர்’ மற்றும் 'அயலான்' படங்களை முடித்துவிட்டு, அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது இன்னும் முடிவாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்