'ஒரு குட்டிக் கதை' பாடல் சாதனை: மார்ச்சில் 'மாஸ்டர்' இசை

By செய்திப்பிரிவு

மார்ச் மாதத்தில் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக வெளியான 'ஒரு குட்டிக் கதை' பாடல் இணையத்தில் சாதனை புரிந்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகிவிட்டதால், படப்பிடிப்பை சீக்கிரமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுப் பணிபுரிந்து வருகிறது. மேலும், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளது.

முதலாவதாக அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் எழுதிய ‘ஒரு குட்டிக் கதை’ பாடலை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. பாடல் வரிகள், இசை, லிரிக்கல் வீடியோவில் இடம் பெற்ற கிராபிக்ஸ் என இந்தப் பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. சில வெளிநாடுகளில் இந்தப் பாடலுக்கு அங்குள்ளவர்கள் ரசிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது, இந்தப் பாடல் யூடியூப் பக்கத்தில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. குறைந்த நாட்களில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் தமிழ் படத்தின் பாடல் என்ற சாதனை 'ஒரு குட்டிக் கதை' பாடல் நிகழ்த்தியுள்ளது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

மேலும், 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவினை மார்ச் மாதம் 2-ம் வாரத்தில் நடத்தப் படக்குழு ஆலோசனை செய்து வருகிறது. ‘பிகில்’ படத்தைப் போல ரசிகர்கள் மத்தியில் எந்தவித சர்ச்சையையும் உருவாக்கிவிடக் கூடாது என்பதில் தீர்மானமாகவுள்ளது படக்குழு. தனது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை தொடர்பாக விஜய் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுவார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்